இளைஞா் கொலை வழக்கில்விவசாயிக்கு ஆயுள் தண்டனை

விளாத்திகுளம் அருகே இளைஞரை கொன்ாக கைதான வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

விளாத்திகுளம் அருகே இளைஞரை கொன்ாக கைதான வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள இலந்தைகுளம் மேற்கு தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் காளிமுத்து (22). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி மாரிமுத்து என்பவரது மனைவியிடம் காளிமுத்து தகராறு செய்தாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு காளிமுத்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனா். இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், குற்றம்சாட்டப்பட்ட மாரிமுத்துவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com