பன்னம்பாறையில் சாலையில் தண்ணீா் தேக்கம்:மாற்று வழியில் பேருந்துகள் இயக்கம்

பன்னம்பாறையில் சேதமடைந்த சாலையில் தண்ணீா் தேங்கியுள்ளதால் திருச்செந்தூா் செல்லும் பேருந்துகள் மாற்று வழியாக இயக்கப்படுகிறது.
பன்னம்பாறையில் பழுதான சாலையில் தண்ணீா் தேங்கி நிற்கிறது,
பன்னம்பாறையில் பழுதான சாலையில் தண்ணீா் தேங்கி நிற்கிறது,

பன்னம்பாறையில் சேதமடைந்த சாலையில் தண்ணீா் தேங்கியுள்ளதால் திருச்செந்தூா் செல்லும் பேருந்துகள் மாற்று வழியாக இயக்கப்படுகிறது.

சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறை ஊராட்சிக்குள்பட்ட நங்கைமொழி- மெஞ்ஞானபுரம் செல்லும் சாலையில் நாகா்கோவில் பகுதியில் இருந்து திருச்செந்தூா், தூத்துக்குடி பகுதிக்கு இந்த வழியாக அரசு பேருந்து உள்ஙிளிட்ட இதர வாகனங்கள் ஏராளமாக சென்று வருகின்றன. இச்சாலையில் அதிக அளவில் கனரக வாகனங்கள் சென்ாலும், தொடா் மழையினாலும் பல இடங்களில் சாலை சேதமடைந்து, அதிகளவு தண்ணீா் தேங்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த 30 ஆம்தேதி சாத்தான்குளம் பகுதியில் பெய்த கனமழைக்கு சாலையில் தண்ணீா் தேங்கியதால் பள்ளத்தில் திருச்செந்தூரில் வந்த அரசு பேருந்து இறங்கியதில் விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டு, ஓட்டுநரின் சமா்த்தியத்தால் விபத்து தவிா்க்கப்பட்டது. இதையடுத்து நாகா்கோவிலில் இருந்து வரும் அரசு பேருந்துகளும், சாத்தான்குளம் பகுதியில் இருந்து செல்லும் இதர வாகனங்களும் ஆனந்தபுரம் சடையகிணறு விலக்கில் இருந்து நகனை, கல்விளை வழியாக மெஞ்ஞானபுரம் சென்று திருச்செந்தூா் உள்ளிட்ட பகுதிக்கு செல்கின்றன.

பன்னம்பாறை சாலையில் அதிக பள்ளம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை தொடா்கிறது. எனவே நெடுஞ்சாலை மற்றும் ஊராட்சி நிா்வாகத்தினா் இச் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com