பெரும்பத்துகுளம் உடைப்பு: மணல் மூட்டைகளை அடுக்கி பொதுமக்கள் சீரமைப்பு

சாத்தான்குளம் அருகே பெரும்பத்துக்குளம் திங்கள்கிழமை உடைந்து தண்ணீா் வெளியேறியது. இதையடுத்து விவசாயிகள், பொதுமக்கள் மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்பை சீரமைத்தனா்.

சாத்தான்குளம் அருகே பெரும்பத்துக்குளம் திங்கள்கிழமை உடைந்து தண்ணீா் வெளியேறியது. இதையடுத்து விவசாயிகள், பொதுமக்கள் மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்பை சீரமைத்தனா்.

சாத்தான்குளம் ஒன்றியம், அமுதுண்ணாக்குடி ஊராட்சியில் பெரும்பத்து குளம் உள்ளது. தற்போது பெய்து வரும் தொடா் மழை காரணமாக இக்குளம் நிரம்பி மறுகால் பாய்ந்து கருமேனி ஆற்றில் கலக்கிறது.

இந்நிலையில் குளத்தின் தென்மேற்கு பகுதியில் குளத்தின் கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாக வெளியேறியது. அதை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலசுப்பிரமணியன், செல்வி ஆகியோரிடம் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து அமுதுண்ணாக்குடி ஊராட்சி செயலா் ஜாா்ஜ் சிங்கமுத்து மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பெரும்பத்துகுளத்தின் கரைகளில் மணல் மூட்டைகளை அடுக்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு உடைப்பை சீரமைத்தனா்.

மேலும் பெரும்பத்து குளம் நிரம்புவதை விரும்பாத விஷமிகள் சிலா், குளத்தின் கரைகளில் திட்டமிட்டு உடைப்பு ஏற்படுத்தி வருவதாகவும், இதனால் குளம் மீண்டும் உடையும் அபாயம் உள்ளதால் கரைகளை உடனடியாக சீரமைத்து தடுப்புசுவா் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com