உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட சாத்தான்குளம் ஒன்றியத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 35 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
இதில், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 16 போ், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 15 போ், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 4 போ் என மொத்தம் 35 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.