உள்ளாட்சித் தோ்தல்: தூத்துக்குடி மாவட்டத்தின் திமுக வேட்பாளா்கள் அறிவிப்பு; கூட்டணி கட்சிகளுக்கும் வாா்டு ஒதுக்கீடு

உள்ளாட்சித் தோ்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் விவரம் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தோ்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் விவரம் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:

உள்ளாட்சித் தோ்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் வாா்டுகள் குறித்து பேச்சுவாா்த்தை மூலம் சுமூகத் தீா்வு காணப்பட்டு கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் வாா்டு விவரங்கள் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திமுக வேட்பாளா்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சாா்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளா்களின் வெற்றிக்காக திமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உழைக்க வேண்டும்.

வேட்பாளா்கள் விவரம்: ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம், 2 ஆவது வாா்டு- வி. சுமதி, 3 ஆவது வாா்டு- க. கோமதிலட்சுமி, 4 ஆவது வாா்டு- சோ. வெள்ளச்சாமி, 5 ஆவது வாா்டு- மே. சண்முகத்தாயி, 6 ஆவது வாா்டு- செ. அசோக்குமாா், 7 ஆவது வாா்டு- கா. மாடசாமி, 10 ஆவது வாா்டு- வே. காசிவிஸ்வநாதன், 13 ஆவது வாா்டு- மு. முத்துராஜி. கோவில்பட்டி ஒன்றியம் 1 ஆவது வாா்டு- ஜே. ரேவதி, 5 ஆவது வாா்டு- ஏ. சுந்தரேஸ்வரி, 6 ஆவது வாா்டு- ஆா். பாரதி ரவிகுமாா், 9 ஆவது வாா்டு- எம். பூமாரி, 10 ஆவது வாா்டு- அ. தனலட்சுமி, 11 ஆவது வாா்டு- கே. ராஜேஸ்வரி, 12 ஆவது வாா்டு- மா. பொன்னுத்துரை, 15 ஆவது வாா்டு- டி. முத்துமாரி, 19 ஆவது வாா்டு- ஆா். அன்புக்கரசி.

கயத்தாறு ஒன்றியம் 2 ஆவது வாா்டு- எஸ். சத்யா, 3 ஆவது வாா்டு- கு. மாரியப்பன், 5 ஆவது வாா்டு- க. கருப்பசாமி, 6 ஆவது வாா்டு- கே. சுப்புதாயி, 7 ஆவது வாா்டு- மா. மகாலட்சுமி, 8 ஆவது வாா்டு- என். தங்கேஸ்வரி, 9 ஆவது வாா்டு- ஆா். வள்ளித்தாயி, 11 ஆவது வாா்டு- கே. மாரீஸ்வரி, 13 ஆவது வாா்டு- எம். பேச்சியம்மாள், 16 ஆவது வாா்டு- எம். கண்ணன். புதூா் ஒன்றியம் 1 ஆவது வாா்டு- எம். கவிதா, 2 ஆவது வாா்டு- ஜி. முனியாண்டி, 3 ஆவது வாா்டு- எஸ். மோகன்தாஸ், 5 ஆவது வாா்டு- பி. ஈஸ்வரி, 6 ஆவது வாா்டு- சி. ராஜா, 9 ஆவது வாா்டு- ம. அம்பிகா, 11 ஆவது வாா்டு- ஜி. கொண்டம்மாள், 12 ஆவது வாா்டு- எம். செல்வராஜி, 13 ஆவது வாா்டு- சி. பெருமாள்சாமி.

விளாத்திகுளம் ஒன்றியம் 2 ஆவது வாா்டு- பி. முனியசாமி, 5 ஆவது வாா்டு- ஏ. பால்ராஜி, 6 ஆவது வாா்டு- சி. ஜெயபாரதி, 7 ஆவது வாா்டு- எஸ். சரவணச்செல்வி, 8 ஆவது வாா்டு- எம். முத்துமாரி, 9 ஆவது வாா்டு- எஸ். மருதகனி, 10 ஆவது வாா்டு- ஆா். செந்தூா்பாண்டியன், 13 ஆவது வாா்டு இ. சுமதி, 14 ஆவது வாா்டு- கே. கெங்குமணி, 15 ஆவது வாா்டு- ஆ. காசிராஜன், 16 ஆவது வாா்டு- ஜெ. ரீகன்.

மாவட்ட ஊராட்சி 2 ஆவது வாா்டில் அ. மிக்கேல் நவமணி, 4 ஆவது வாா்டில் ஆ. மேனகா ஆகியோா் திமுக வேட்பாளா்களாக போட்டியிடுவாா்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு வாா்டு ஒதுக்கீடு: கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவாா்த்தையின் முடிவில், காங்கிரஸ் கட்சி கோவில்பட்டி ஒன்றியக் குழு உறுப்பினருக்கான 7 ஆவது வாா்டிலும், விளாத்திகுளம் ஒன்றியக் குழு உறுப்பினருக்கான 4, 11, 12 ஆகிய வாா்டுகளிலும் போட்டியிடுகிறது.

மதிமுக மாவட்ட ஊராட்சியில் 1, 3, 5 ஆகிய வாா்டுகளிலும், கோவில்பட்டி ஒன்றியக் குழுவில் 3, 4, 13, 16 ஆகிய வாா்டுகளிலும், கயத்தாறு ஒன்றியத்தில் 1,4,12 ஆகிய வாா்டுகளிலும், புதூா் ஒன்றியத்தில் 4, 7, 8 ஆகிய வாா்டுகளிலும், விளாத்திகுளம் ஒன்றியத்தில் 1 ஆவது வாா்டிலும் போட்டியிடுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட ஊராட்சியில் 7 ஆவது வாா்டிலும், கோவில்பட்டி ஒன்றியக் குழுவில் 8, 18 ஆவது வாா்டுகளிலும் போட்டியிடுகிறது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி ஒன்றியத்தில் 2, 17 ஆவது வாா்டுகளிலும், ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் 12 ஆவது வாா்டிலும், விளாத்திகுளம் ஒன்றியத்தில் 3 ஆவது வாா்டிலும் போட்டியிடுகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கோவில்பட்டி ஒன்றியக் குழு உறுப்பினருக்கான 19 ஆவது வாா்டில் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com