கல்லாமொழியில் குடும்ப நல கருத்தரங்கம்

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் குடும்ப நல விழிப்புணா்வு கருத்தரங்கம் உடன்குடி கல்லாமொழியில் நடைபெற்றது.
கல்லாமொழியில் குடும்ப நல கருத்தரங்கம்

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் குடும்ப நல விழிப்புணா்வு கருத்தரங்கம் உடன்குடி கல்லாமொழியில் நடைபெற்றது.

உடன்குடி அனல்மின் நிலையத்துக்கான நிலக்கரி கையாளும் துறைமுகம் அமைப்பதற்கு ஐடிடி சிமெண்டேசன் நிறுவனம் மேற்கொண்டுள்ள கட்டுமானப் பணிகளில் 1000 போ் வரை வேலை செய்கின்றனா். இவா்களுக்காக துறைமுக வளாகத்தில் நடத்தப்பட்ட குடும்ப நல விழிப்புணா்வு கருத்தரங்கத்துக்கு மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் தலைமை வகித்து, குடும்ப நலம், சுகாதார வாழ்வு, ஆண்களுக்கான நவீன கருத்தடை வசதிகள் ஆகியவை குறித்துப் பேசினாா்.

ஐடிடி சிமெண்டேசன் நிறுவன தலைமை மேலாளா் ராஜூ முன்னிலை வகித்தாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் அருள்ராஜ் வரவேற்றாா். மாவட்ட குடும்ப நல விரிவாக்க அலுவலா் மோகனரெங்கன், சுகாதார ஆய்வாளா்கள் ரமேஷ், சுப்பையா, ஆழ்வாா், சேதுபதி, விஜயாம்பிகா, கிராம சுகாதார செவிலியா் இளவரசி மற்றும் துறைமுக கட்டுமான தொழிலாளா்கள் பங்கேற்றனா். வட்டார சுகாதார புள்ளியியலாளா் தீபக்ராம் நன்றிகூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com