திருச்செந்தூரில் இரும்புக் கடையை உடைத்து ரூ. 12 ஆயிரம் திருட்டு
By DIN | Published On : 14th February 2019 07:13 AM | Last Updated : 14th February 2019 07:13 AM | அ+அ அ- |

திருச்செந்தூரில் இரும்புக் கடையை உடைத்து ரூ.12 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் சாலையில் வசித்து வருபவர் ஆறுமுகபாண்டி (42). இவர் அப்பகுதியில் இரும்புக் கடை நடத்தி வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு கடையை வழக்கம் போல் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். புதன்கிழமை காலையில் கடையை திறக்கச் சென்றபோது, கடையின் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பார்த்தபோது ரூ. 12 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருச்செந்தூர் கோயில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.