தேசிய வாக்காளர் தினம்: விழிப்புணர்வு போட்டிகளை நடத்த ஆட்சியர் அழைப்பு

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு போட்டிகளை நடத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு போட்டிகளை நடத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:
ஜன. 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக தேவையான சக்கர நாற்காலி, சாய்வு தளம், தனிக் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயார் நிலையில் உள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து, தேவைப்படும்பட்சத்தில் பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விரைவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதால் அதற்கு பின்பாகவும் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான விழிப்புணர்வுப் பணிகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். 
தேர்தல் கல்விக் குழுவினர் மூலம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும்.
 தேசிய வாக்காளர் தினத்தன்று அனைத்து அலுவலர்களும் வாக்காளர் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றார் அவர். தொடர்ந்து, தேர்தல் விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டி பதாகைகளை அவர் பார்வையிட்டார். 
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தூத்துக்குடி சார்-ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, முதன்மை கல்வி அலுவலர் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், கோட்டாட்சியர்கள் விஜயா (கோவில்பட்டி), கோவிந்தராசு (திருச்செந்தூர்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com