தமாகா மறியல் போராட்டம் வாபஸ்

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை முதல் நடைபெற இருந்த தொடர் மறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. 

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை முதல் நடைபெற இருந்த தொடர் மறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. 
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையத்துக்கு நிரந்தர கட்டடம் கட்ட வலியுறுத்தி பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லையாம். இதையடுத்து, கோரிக்கை நிறைவேறும் வரை, தமாகா சார்பில் புதன்கிழமை தொடங்கி தொடர் மறியல் போராட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இதையொட்டி, நகராட்சி அலுவலகத்தில் நகராட்சிப் பொறியாளர் கோவிந்தராஜன் தலைமையில் புதன்கிழமை காலை சமாதானக் கூட்டம் நடைபெற்றது. மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன், தமாகா நகரத் தலைவர் ராஜகோபால், வட்டாரத் தலைவர் ஆழ்வார்சாமி, நிர்வாகிகள் பால்ராஜ், ரசாக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கட்டடம் புறக் காவல் நிலையத்துக்கென ஒதுக்கப்படும் என, கூறப்பட்டதையடுத்து, தொடர் மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com