குடிநீர் பிரச்னை: திருச்செந்தூரில் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு
By DIN | Published On : 12th July 2019 06:48 AM | Last Updated : 12th July 2019 06:48 AM | அ+அ அ- |

திருச்செந்தூர் பகுதி விடுதிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குடிநீர் இணைப்பில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர்.
திருச்செந்தூர் பேரூராட்சியின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான கானம் குடிநீர்த்திட்ட பிரதான குழாயில் முறைகேடாக இணைப்பு எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும், குடியிருப்பு பகுதியில் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதா? என்பதும் குறித்தும் திருச்செந்தூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பயணியர் விடுதி சாலை, கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் தங்கும் விடுதிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜ் தலைமையிலானோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல்முருகன், உதவி பொறியாளர் சண்முகநாதன், அலுவலர் அய்யப்பன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உடனிருந்தனர்.