கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை

கோவில்பட்டி அருகே மயான சாலையில் தனியார் வாகனங்கள் செல்வதை தடை செய்யக் கோரி, அப்பகுதி மக்கள் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை முற்றுகையிட்டனர். 


கோவில்பட்டி அருகே மயான சாலையில் தனியார் வாகனங்கள் செல்வதை தடை செய்யக் கோரி, அப்பகுதி மக்கள் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை முற்றுகையிட்டனர். 
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், லிங்கம்பட்டி ஊராட்சி, சமத்துவபுரம் பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு, ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து குழாய் மூலம் மயான சாலை வழியாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு குழாய் பதிக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறதாம். 
இந்நிலையில், மயான சாலை வழியாக தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான லாரிகள் செல்வதால் சாலையின் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் சேதமடைந்து தண்ணீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுகிறதாம். இதையடுத்து, மயான சாலை வழியாக தனியார் நிறுவன வாகனங்கள் செல்வதை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் ஊர் தலைவர் கண்ணையா தலைமையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பின்னர், போராட்டக் குழுவினருடன் துணை வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com