குரூப் 4 தேர்வு எழுதுவோருக்கு பயிற்சி

தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள கின்ஸ் அகாதெமியில் குரூப் 4 தேர்வு எழுத உள்ளவர்களுக்கு தேர்வுக்கு

தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள கின்ஸ் அகாதெமியில் குரூப் 4 தேர்வு எழுத உள்ளவர்களுக்கு தேர்வுக்கு தயாராகும் வழிமுறைகள் குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
அகாதெமியின் நிறுவனர் எஸ். பேச்சிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட கூட்டுறவுத் துறை தணிக்கையாளர் வெ. நாகராஜன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பயிற்சி) ராகவேந்திரா கே. ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியது: போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவதற்கு மிகுந்த அறிவாளியாக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஆனால் கடின உழைப்பாளியாக இருக்க வேண்டும். தினமும் குறைந்தபட்சம் பத்து மணி நேரமாவது படிக்க வேண்டும்.
தினமும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். அதிலிருந்து குறிப்புகள் எடுக்க வேண்டும் என்றார் அவர். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com