காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் இறந்த வீரரின் குடும்பத்திற்கு ரூ. 2.5 லட்சம் நிதியுதவி

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் இறந்த கயத்தாறு சவலாப்பேரி சி.ஆர்.பி.எப். வீரரின் பெற்றோருக்கு மருந்து 

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் இறந்த கயத்தாறு சவலாப்பேரி சி.ஆர்.பி.எப். வீரரின் பெற்றோருக்கு மருந்து உற்பத்தி நிறுவனம் சார்பில் ரூ. 2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. 
சவலாப்பேரியைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் சுப்பிரமணியன் காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்திற்கு அரசு, அரசியல் கட்சியினர், காவல் துறை, நீதித்துறை மற்றும் தன்னார்வலர்கள் நிதியுதவி அளித்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஸ்ரீ மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இறந்த வீரர் சுப்பிரமணியனின் பெற்றோர் கணபதி - மருதத்தாளிடம், மேன்கைன்ட் மருந்து உற்பத்தி நிறுவனம் சார்பில், ரூ. 2.50 லட்சத்திற்கான காசோலையை முதுநிலை குடிமை மருத்துவர் ஸ்ரீவெங்கடேஷ் வழங்கினார். அப்போது ஸ்ரீ மருத்துவமனை நிர்வாக 
இயக்குநர் லதா ஸ்ரீவெங்கடேஷ் உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com