சாஸ்தாவிநல்லூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 15.30 லட்சம் கடனுதவி அளிப்பு
By DIN | Published On : 14th June 2019 07:02 AM | Last Updated : 14th June 2019 07:02 AM | அ+அ அ- |

சாஸ்தாவிநல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 11 பேருக்கு ரூ. 15.30 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
சாஸ்தாவிநல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அ.லூர்துமணி தலைமையில் நடைபெற்றது. செயலர் ராஜகுமார் வரவேற்றார். கூட்டத்தில் 8 உறுப்பினர்களுக்கு மத்திய காலக்கடனாக ரூ. 3,30,000, 3 உறுப்பினர்களுக்கு வீட்டு அடமானக் கடனாக ரூ. 12 லட்சம் என மொத்தம் ரூ.15.30 லட்சம் கடனுதவியை பயனாளிக்கு தலைவர் வழங்கினார். கூட்டத்தில் துணைத் தலைவர் ராபின்சன் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இருதயராஜ், ரவிச்சந்திரன், அருள்ராஜ், அமல்ராஜ், சாந்தி, பரணிதேவி, உஷா ஆனந்தி, ரஞ்சிதம், ஜானகி ஆகியோர் கலந்து கொண்டனர். உதவிச் செயலர் பெனிஸ்கர் நன்றி கூறினார்.