திருச்செந்தூர் குடிநீர் பிரச்னையை தீர்க்க லாரி மூலம் குடிநீர்: அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.

திருச்செந்தூர் பகுதி குடிநீர் பிரச்னையை தீர்க்க லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என எம்எல்ஏ அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருச்செந்தூர் பகுதி குடிநீர் பிரச்னையை தீர்க்க லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என எம்எல்ஏ அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்செந்தூர் பேரூராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக எம்எல்ஏ அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை பேரூராட்சி அலுலகத்துக்கு வந்தார். தொடர்ந்து அவர்  குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கான வழிகள் குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ந.நாகராஜனிடம் ஆலோசனை நடத்தினார்.
குடிநீர் பிரச்னையை தீர்க்க லாரி மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  திருச்செந்தூர் பேரூராட்சி வணிக வளாக கடைகளை நடத்தி வருபவர்களுக்கே பேரூராட்சி விதிகளின் படி மீண்டும் கடைகள் வழங்க வேண்டும்.  புதைச் சாக்கடைத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். தோப்பூர் பகுதியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி பணியை விரைந்து முடிக்க வேண்டும்.  குமாரபுரத்தில் தெருவிளக்குகள் அமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து  பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அலைபேசியில் பேசி உடனே நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.
திருச்செந்தூர் திமுக ஒன்றியச்செயலர் செங்குழி ரமேஷ், நகரச் செயலர் வாள் சுடலை, முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் சு.கோமதிநாயகம், தி.செந்தில்ஆறுமுகம், மா.சுதாகர், க.ராஜ்மோகன் , நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் நம்பிராஜன், தோப்பூர் ஊர்த்தலைவர் நந்தகுமார், வணிக வளாக கடை வியாபாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com