பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வாகனப் பிரசாரம்

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை, தூத்துக்குடி மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வாகனப் பிரசாரம்  நடைபெற்றது. 

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை, தூத்துக்குடி மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வாகனப் பிரசாரம்  நடைபெற்றது. 
 கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த வாகனப் பிரசாரத்திற்கு தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கத் தலைவர் ஆசியா ஃபார்ம்ஸ் பாபு, செயலர் ரவிமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  நேஷனல் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்ட வாகனப் பிரசாரத்தை கல்லூரி முதல்வர் சண்முகவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனப் பிரசாரம் நாலாட்டின்புத்தூர், துரைசாமிபுரம், இடைசெவல், செட்டிகுறிச்சி, கழுகுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் நின்று பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 
  மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக மண் குவளை, வாழை இலை, துணிப்பை உள்ளிட்ட பொருள்களைப் பயன்படுத்த வலியுறுத்தி கலைக் குழுவினர் சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.  மேலும், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு துணிப்பை மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர். 
நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துமுருகன், கல்லூரியின் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் அனுஷியா தேவி, தேசிய பசுமைப்படை ஆசிரியர்கள் சுப்பிரமணியன், ஜெயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
கல்லூரியின் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் சங்கர் வரவேற்றார். ரமணன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com