மத்திய அரசைக் கண்டித்து கோவில்பட்டியில் மறியல்: 61 பேர் கைது

தொழிலாளர் சேமநல நிதி ஓய்வூதியதாரர்களுக்கு உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த

தொழிலாளர் சேமநல நிதி ஓய்வூதியதாரர்களுக்கு உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தவறியதாக மத்திய அரசைக் கண்டித்து கோவில்பட்டியில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 61 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தொழிலாளர் சேமநல நிதி ஓய்வூதியதாரர்களுக்கு உயர்நிலைக் குழுவின் பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் அலவென்ஸுடன் ரூ.9ஆயிரம் உடனே வழங்க வேண்டும். தொடர்ந்து பிடித்தம் செய்யப்பட்டு வருகிற கம்ப்யூடேஷன் தவணையை உடனே நிறுத்த வேண்டும். இரு ஓய்வூதியம் வாங்கியவர்களுக்கு நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும். விலக்கு அளிக்கப்பட்ட நிறுவன ஊழியர்களுக்கு உடனே உயர் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொழிலாளி சேமநல நிதி ஓய்வூதியதாரர்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி அளித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் சேமநல நிதி ஓய்வூதியர்கள் சங்கம், அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த மறியல் போராட்டத்துக்கு சேமநல நிதி ஓய்வூதியர் நலச் சங்க திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். 
செயலர் ராமசுப்பு, ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்டப் பொதுசெயலர் ராஜசேகரன், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த வெங்கடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணைத் தலைவர் தமிழரசன் தொடங்கி வைத்தார். நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5ஆவது தூண் அமைப்பின் நிறுவனர்- தலைவர் சங்கரலிங்கம் போராட்டத்தை வாழ்த்திப் பேசினார்.
இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 61 பேரை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் தலைமையில் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com