கோவில்பட்டியில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலையம் சார்பில் கோவில்பட்டியில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலையம் சார்பில் கோவில்பட்டியில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
கோவில்பட்டி இலக்குமி ஆலை அருகேயுள்ள ரயில்வே கேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இருப்புப் பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மகாகிருஷ்ணன் தலைமையில் போலீஸார் கேட்-கீப்பர், மக்களிடையே நல்லுறவு ஏற்படுத்தும் வகையில், ரயில்வே கேட் மூடியிருக்கும்போது பொதுமக்கள் பொறுமை காத்து ரயில்வே கேட்டை திறந்தபின்பு தண்டவாளத்தைக் கடக்க வேண்டும் என்றும், ஆளில்லாத ரயில்வே கேட் மற்றும் மூடியிருக்கும் ரயில்வே கேட்டை பாதசாரிகள் கடக்கும்போது, இருபுறமும் பார்த்து கடக்க வேண்டும் என்றும், ஆளில்லாத ரயில்வே கேட்டில் வாகனங்கள் செல்லும்போது நிறுத்தி நின்று கவனமுடன் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க வேண்டும். 
விலை மதிப்பிட முடியாத உயிரைப் பாதுகாக்க பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள் சட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com