ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் "பசுமை தூத்துக்குடி' திட்டம் தொடக்கம்

தூத்துக்கு பகுதியில் 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, அவற்றை பேணி வளர்க்கும் "பசுமை தூத்துக்குடி' திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

தூத்துக்கு பகுதியில் 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, அவற்றை பேணி வளர்க்கும் "பசுமை தூத்துக்குடி' திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
 சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில், "பசுமை தூத்துக்குடி' என்ற திட்ட தொடக்க விழா தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன துணைத் தலைவர் தனவேல் தலைமை வகித்தார்.  நிகழ்ச்சியில்,  தென்னிந்திய திருச்சபை (சிஎஸ்ஐ) தேவாலய போதகர் ஆண்ட்ரு விக்டர் பசுமை திட்டத்தை தொடங்கிவைத்தார்.  முதல்கட்டமாக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுகிற பல்வேறு கிராமங்களின் பிரதிநிதிகளிடம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் பங்கஜ் குமார் கூறியது: தூத்துக்குடியை ஒரு பசுமை நகரமாக மாற்றியமைப்பது இந்தத் திட்டத்தின் முதல் நோக்கம் ஆகும். ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை சுற்றியுள்ள 14 கிராமங்கள், சிப்காட் தொழிற்பூங்கா, தூத்துக்குடி-மதுரை, தூத்துக்குடி- திருநெல்வேலி சாலைகளில் நகர நுழைவாயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவு வரை மற்றும் பொது திறந்தவெளி அமைவிடங்களில் 10 லட்சம் மரக்கன்றுகளை நட ஸ்டெர்லைட் காப்பர் திட்டமிட்டிருக்கிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com