பகத்சிங் நினைவு தினம்: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரத்த தானம்
By DIN | Published On : 24th March 2019 01:07 AM | Last Updated : 24th March 2019 01:07 AM | அ+அ அ- |

பகத்சிங்கின் 88ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பகத்சிங் ரத்த தானக் கழகம் சார்பில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற இம்முகாமுக்கு, ரத்த தானக் கழகச் செயலர் காளிதாஸ் தலைமை வகித்தார். தலைவர் ராஜபாண்டி முன்னிலை வகித்தார். பார்வதி உயர்நிலைப் பள்ளித் தாளாளர் வினோத்குமார், எட்டயபுரம் ஆசிரியர் பயிற்சி பள்ளி நிறுவனர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் முகாமை தொடங்கிவைத்தார். மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவர் தேவசேனா தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்ற 20 பேரிடமிருந்து ரத்தத்தை சேகரித்தனர்.
இதில், ரத்த தானக் கழகத்தைச் சேர்ந்த சண்முகராஜ், சரவணன், இசக்கிமுத்து, முத்துகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.