வணிக நிறுவனங்களின் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வணிகர் சங்கம் வலியுறுத்தல்

வணிக நிறுவனங்கள், கடைகளுக்கான சொத்துவரி உயர்வினை திரும்பப் பெற வேண்டும் என  கோவில்பட்டியில்

வணிக நிறுவனங்கள், கடைகளுக்கான சொத்துவரி உயர்வினை திரும்பப் பெற வேண்டும் என  கோவில்பட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். சிறு உணவு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முத்துராஜா, கழுகுமலை வர்த்தக சங்கத் தலைவர் ராமசாமி, குளத்தூர் வர்த்தக சங்க துணைத் தலைவர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில், ரோட்டரி சங்கச் செயலர் ரவிமாணிக்கம், பேக்கரி மற்றும் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் சண்முகசுந்தரம், மாடசாமி, ஹோட்டல் உரிமையாளர் சங்க நிர்வாகி ஆர்த்தி கருப்பசாமி, சிறு உணவு உற்பத்தியாளர் சங்கச் செயலர் மோகன்ராஜ், சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வம், கடலை மிட்டாய் வியாபாரிகள் சங்கத் தலைவர் கார்த்திக்,  கோயில் கடைகள் சங்கச் செயலர் ஆறுமுகச்சாமி, பட்டாசு வியாபாரிகள் சங்க நிர்வாகி பெரியசாமிபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள்: சென்னையில் மே 5 இல் நடைபெறும் வணிகர் தின மாநில மாநாட்டுக்கு வணிகர்கள் குடும்பத்துடன் 200 வாகனங்களில் செல்வது; உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் உரிமத்தை ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்பதை ரத்து செய்வதுடன், வணிகர்கள் ஆயுளுக்கு ஒரு முறை என மாற்றி அமைக்க வேண்டும்;
தராசு படிகளுக்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை முத்திரை வைக்கும் வகையில் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்; சில்லரை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு செய்வதை தடை செய்ய வேண்டும்;  மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் மாற்றுப் பொருள்களை அறிமுகம் செய்ய வேண்டும்; கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்; பேக்கரி, இனிப்பு மற்றும் காரம் உள்ளிட்ட உணவு பொருள்களுக்கு ஒரே விதமான ஜி.எஸ்.டி. வரியினை 5 சதமாக மாற்ற அமைக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com