தேர்தல் செலவு கணக்குகளை முறையாக தாக்கல் செய்ய வேண்டும்: ஆட்சியர்

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவு கணக்குகளை முறையாக

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவு கணக்குகளை முறையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றார் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
அப்போது ஆட்சியர் பேசியது: ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் மே 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு தேவையான இயந்திரங்கள் தயாராக உள்ளன. அதில் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் சிலதினங்களில் ரேண்டம் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும்.
பின்னர் வாக்குச்சீட்டு பொருத்தப்பட்டு ரேண்டம் முறையில் வாக்குச்சாவடிகள் தேர்வு செய்யப்படும். களத்தில் உள்ள வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கண்காணிக்க பொதுபார்வையாளர் சுரேஷ்குமார், செலவு கணக்கு பார்வையாளர் அஞ்சாணிகுமார் பாண்டே ஆகியோர் வந்துள்ளனர்.
 தேர்தல் செலவின பார்வையாளர்கள், வேட்பாளர்களை 3 முறை தாங்கள் செய்த செலவுகளை கண்காணிக்க அழைப்பார். அப்போது  வேட்பாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள செலவுகள் அனைத்தையும் சரியான முறையில் காண்பிக்க வேண்டும். தேர்தல் கணக்குகளை மே 6, 13 மற்றும் 17ஆம் தேதிகளில் தாக்கல் செய்ய வேண்டும். முறையான கணக்குகளை தாக்கல் செய்யாத வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார் அவர்.
கூட்டத்தில், தேர்தல் பொதுபார்வையாளர் சுரேஷ்குமார்,  செலவு கணக்கு பார்வையாளர் அஞ்சாணிகுமார் பாண்டே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கிறிஸ்டி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com