கோவில்பட்டியில் மதிமுக 26ஆம் ஆண்டு தொடக்க விழா
By DIN | Published On : 07th May 2019 08:23 AM | Last Updated : 07th May 2019 08:23 AM | அ+அ அ- |

மதிமுக 26ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுகவினர் திங்கள்கிழமை கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு கேக் வெட்டி கொண்டாடினர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மதிமுக நகரச் செயலர் பால்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணிச் செயலர் விநாயகா ஜி.ரமேஷ் முன்னிலை வகித்தார்.
கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் ஆர்.எஸ்.ரமேஷ் கேக் வெட்டி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும், மேற்கு ஒன்றியச் செயலர் அழகர்சாமி ஏற்பாட்டில் ராஜீவ் நகரிலுள்ள முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
கயத்தாறு நகர மற்றும் ஒன்றிய மதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜசேகர், மாநில விவசாய அணி துணைச் செயலர் சிவக்குமார், மாநில கலைத்துறை துணைச் செயலர் பொன் ஸ்ரீராம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், கட்சி நிர்வாகிகள் இந்திரன், கார்த்திகேயன், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.