ஸ்டெர்லைட் சார்பில் கோடை கால கணினி பயிற்சி முகாம் தொடக்கம்
By DIN | Published On : 15th May 2019 06:51 AM | Last Updated : 15th May 2019 06:51 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில், இளைஞர்களுக்கான கோடை கால கணினி பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நிறுவனம் கோடைகால விடுமுறையை முன்னிட்டு, சீதா திறன் வளர்ப்பு மையத்துடன் இணைந்து மாணவர்களுக்கு இலவசமாக அடிப்படை கணினி பயிற்சி மற்றும் டேலி ஆகிய பயிற்சிகளை 30 நாள்கள் அளிக்கிறது. பயிற்சி தொடக்க விழாவுக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன இணை -துணை தலைவர் சுமதி தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். சீதா திறன் வளர்ப்பு மையத்தின் தலைமை செயல் அதிகாரி கருணாகரன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன அலுவலர்கள் நிஷின், சுகந்தி செல்லதுரை, ஜெயஸ்ரீ மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.