கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் வருண ஜெபம்
By DIN | Published On : 16th May 2019 06:49 AM | Last Updated : 16th May 2019 06:49 AM | அ+அ அ- |

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் மழை வேண்டி புதன்கிழமை வருண ஜெபம் நடைபெற்றது.
கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இந்நிலையில் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் மழை வேண்டி வருண ஜெபம் நடைபெற்றது. இதையொட்டி கோயில் நடை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து வருண ஜெபம், மழை பதிகம் பாடுதல் நடைபெற்றது.
தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.இதையடுத்து, சுவாமிக்கு தாராபிஷேகம் நடைபெற்றது. தாராபிஷேகம் இம்மாதம் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, கோயில் நிர்வாக செயல் அலுவலர் பாலசுப்பிரமணியராஜன், தலைமை எழுத்தர் ராமலிங்கம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.