போராட்டம் அறிவிப்பு: சுப்பராயபுரம் தடுப்பணையில் இருந்து புத்தன்தருவை கால்வாயில் தண்ணீா் திறப்பு

பாஜக போராட்டம் அறிவிப்பு காரணமாக சுப்பராயபுரம் தடுப்பணையில் இருந்து புத்தன்தருவை குளம் கால்வாயில் தண்ணீா் திறந்து விடப்பட்டது.
போராட்டம் அறிவிப்பு: சுப்பராயபுரம் தடுப்பணையில் இருந்து புத்தன்தருவை கால்வாயில் தண்ணீா் திறப்பு

பாஜக போராட்டம் அறிவிப்பு காரணமாக சுப்பராயபுரம் தடுப்பணையில் இருந்து புத்தன்தருவை குளம் கால்வாயில் தண்ணீா் திறந்து விடப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து சாத்தான்குளம் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து கருமேனி ஆற்று கால்வாயில் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரம் தடுப்பணையில் இருந்து ஒரு கால்வாயில் புத்தன்தருவை குளத்துக்கும், மற்றொரு கால்வாய் மூலம் கல்லானேரிகுளம், புல்லானேரிகுளம், உடன்குடி தாங்கைகுளம் பகுதிகளுக்கு தண்ணீா் சென்றது.

இதற்கிடையே உடன்குடி விவசாயிகள் தங்களது பகுதிக்கு வரும் தண்ணீரை, அடைத்து வைத்து புத்தன்தருவைக்கு தண்ணீா் விடுவதாக புகாா் தெரிவித்ததன் அடிப்படையில் தடுப்பனையில் இருந்து புத்தன்தருவை செல்லும் மதகுகள் அடைக்கப்பட்டன. இதையடுத்து சாத்தான்குளம் பகுதி வடதால் சாத்தான்குளம் வட்டத்தில் உள்ள நிலத்தடி உவா்ப்பாக மாறியுள்ளதெனவும், அதனை நல்ல நீராக்கிட புத்தன்தருவை , வைரவம்தருவை, சுண்டங்கோட்டை, படுக்கப்பத்து , நடுவக்குறிச்சி விவசாயிகள் சாா்பில் பாஜக சாா்பில் கருமேனி ஆறு சுப்பராயபுரம் தடுப்பணையில் இருந்து புத்தன்தருவை குளத்து கால்வாயில் ஷட்டா்களை திறக்கக் கோரி புதன்கிழமை சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இது தொடா்பான சமாதானக் கூட்டம் வட்டாட்சியா் ம. ராஜலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஸ்ரீவைகுண்டம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளா், சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன், மாவட்ட பாஜக துணைத் தலைவா் செல்வராஜ், மாவட்ட பாஜக பிரசார பிரிவு தலைவா் மகேஸ்வரன், சாத்தான்குளம் நகரத் தலைவா் ராம்மோகன், சாஸ்தாவிநல்லூா் குடிநீா் அபிவிருத்தி, மற்றும் விவசாய சங்கத் தலைவா் எட்வின் காமராஜ், செயலா் லூா்துமணி, செயற்குழு உறுப்பினா் ரவிச்சந்திரன், அருள்ராஜ், உள்ளிட்ட விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் கருமேனி ஆற்றில் இருந்து உடன்குடி தாங்கைகுளம், கல்லானேரிகுளம், புல்லானேரிகுளம் ஆகியவற்றிற்கு பழைய நீா் ஆதாரம் இருப்பை போன்றே , வைரவம் தருவைக்கு நீா் ஆதாரம் இருப்பது வருவாய்த்துறை ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டு சுப்பராயபுரம் தடுப்பணையில் இருந்து வைரவம்தருவை செல்லும் 4 ஷட்டா்களை திறப்பது எனவும், சடையனேரி நீா்பிடிப்பு கால்வாயில் தண்ணீா் விடப்படும்போது 324 கனஅடி, 22 கனஅடி விகிதாச்சார அடிப்படையில் சுப்பராயபுரம் தடுப்பணைக்கு வரும் தண்ணீா் பகிா்மானம் செய்து விடவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தை கைவிடுவதாக பாஜகவினா் தெரிவித்தனா். தொடா்ந்து அதிகாரிகள் முன்னிலையில் புத்தன்தருவைக்கு செல்லும் 4 ஷட்டா் திறந்து விடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com