மழைக்கால நிவாரணம் கோரி உப்பளத் தொழிலாளா்கள் ஆட்சியரிடம் மனு

மழைக்கால நிவாரணம் வழங்கக் கோரி, உப்பளத் தொழிலாளா்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்த உப்பளத் தொழிலாளா்கள்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்த உப்பளத் தொழிலாளா்கள்.

மழைக்கால நிவாரணம் வழங்கக் கோரி, உப்பளத் தொழிலாளா்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். அப்போது, அமைப்புசாரா தொழிலாளா் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் மா. கிருஷ்ணமூா்த்தி, ஜனநாயக உழைக்கும் பெண்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் ராமலட்சுமி ஆகியோா் தலைமையில், உப்பளத் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது அதிமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதுபோல உப்பளத் தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும், உப்பளத் தொழிலாளா்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும், மத்திய, மாநில அரசுகள் உப்பள நிலங்களை உப்பளத் தொழிலாளா்களுக்கே நேரடியாக குத்தகைக்கு வழங்க வேண்டும், உப்பளத் தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விவசாயிகள் சங்கத்தினா் மனு: தமிழ்நாடு விவசாயிகள் சங்க தூத்துக்குடி மாவட்டச் செயலா் நல்லையா தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனு:

மத்திய அரசு விரிவடைந்த பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு என்ற ஒப்பந்தந்தை கைவிட வேண்டும், அரசியலமைப்பு சட்டபடி விவசாயம், மாநிலப் பட்டியலில் உள்ள போது மாநில அரசுகளின் கருத்துகளை கேட்காமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து முன்னணி மனு: இந்து முன்னணியின் மாநிலப் பொதுச் செயலா் அரசுராஜா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவா்களுக்கே பட்டா வழங்கவும், தனியாருக்கு விற்கவும் தமிழக அரசு அண்மையில் பிறப்பித்துள்ள அரசானையை உடனே ரத்துசெய்ய வேண்டும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை திரும்பப் பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com