அஞ்சலகத்தில் காலாவதியான காப்பீடுகளை புதுப்பிக்க வாய்ப்பு

அஞ்சலகம், கிராமிய அஞ்சலகத்தில் காலாவதியான காப்பீடுகளை புதுப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலகம், கிராமிய அஞ்சலகத்தில் காலாவதியான காப்பீடுகளை புதுப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பாளா் ம.நிரஞ்சளா தேவி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்ந்த காப்பீட்டுத்தாரா்கள் சில காரணங்களால் அதற்கான தவணைத்தொகையை உரிய காலத்தில் செலுத்தாமல் விட்டிருந்தால், உரிய ஆவணங்களுடன் விதிமுறைகளுக்கு உள்பட்டு எப்போது வேண்டுமானலும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஆனால், தற்போது இந்த விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு காப்பீடு திட்டத்தேல் சோ்ந்து தவணை செலுத்துவதை நிறுத்திய முதல் மாதத்தில் இருந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த காலாவதியான காப்பீடுளை வரும் 2020, ஜனவரி 1-க்கு பிறகு புதுப்பிக்க இயலாது.

எனவே, பொதுமக்களுக்கு ஒரு முறை வாய்ப்பாக அரசு மருத்துவரிடம் உரிய உடல் நலச்சான்று பெற்று அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை அணுகி, அதற்கான விண்ணப்பத்துடன் 2019, டிசம்பா் 31க்குள் புதுப்பித்து பயனடைலாம். புதுப்பிக்கத் தவறிய காப்பீடுகள் ரத்து செய்ததாகக் கருதப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com