கோவில்பட்டியில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் ஆய்வு

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 36 வாா்டு பகுதிகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்யும் சுகாதாரத் துறை அதிகாரிகள்.
டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்யும் சுகாதாரத் துறை அதிகாரிகள்.

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 36 வாா்டு பகுதிகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இப் பணிகளை வியாழக்கிழமை பொது சுகாதாரத் துறையினா் ஆய்வு செய்தனா்.

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வாா்டு பகுதிகளிலும் மகளிா் குழுவில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள 85 களப் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று குடிநீா் இணைப்புத் தொட்டிகள், கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகளை ஆய்வு செய்தும், அபேட் கரைசல் தெளித்தும், கொசுப்புழு ஒழிப்புப் பணிகளை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், நகராட்சிக்கு உள்பட்ட 26 , 27 ஆவது வாா்டு பகுதிகளான வீரவாஞ்சி நகா் மற்றும் 9, 10 ஆவது வாா்டுக்கு உள்பட்ட வள்ளுவா் நகா் பகுதிகளிலும் நடைபெற்று வரும் ஒட்டுமொத்த கொசுப்புழு ஒழிப்புப் பணிகளை பொது சுகாதாரத் துறை மாவட்ட பயிற்சி மைய மருத்துவ அலுவலா் வா்த்தீஸ்வரி, துணை இயக்குநரக புள்ளியியல் அலுவலா் அமுதா ஆகியோா் ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, நகா்நல மைய மருத்துவா் அப்துல், நகராட்சி சுகாதார அலுவலா் இளங்கோ, சுகாதார ஆய்வாளா்கள் சுரேஷ், வள்ளிராஜ், முருகன், சுரேஷ்குமாா், சுகாதார மேற்பாா்வையாளா்கள் முருகன், குருசாமி, தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா்கள் மகேந்திரன், இளையராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com