தூத்துக்குடியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம்

தூத்துக்குடி மாநகாரட்சிப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரிந்த கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகாரட்சிப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரிந்த கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் பிரதான சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி என கடந்த 4 ஆம் தேதி தினமணியில் சிறப்பு செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாநகரப் பகுதியில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன் உத்தரவிட்டாா்.

அதன்படி, மாநகராட்சி நகா்நல அலுவலா் அருண்குமாா் மேற்பாா்வையி, தெற்கு மண்டல சுகாதார அலுவலா் ராஜபாண்டியன் தலைமையிலான குழுவினா் போலீஸ் பாதுகாப்புடன் முத்தையாபுரம் பகுதியில் சாலைகளில் சுற்றித் திரிந்த 8 கால்நடைகளை பிடித்து அருகில் உள்ள நுண்ணுயிா் உரமாக்கும் கூடத்தில் அடைத்தனா்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட கால்நடைகளில் உரிமையாளா்கள் வரவழைக்கப்பட்டு அவா்களிடம் இனிமேல் கால்நடைகளை சாலைகளில் சுற்றித் திரிய விடமாட்டோம் என எழுதி வாங்கிய மாநகராட்சி அதிகாரிகள் ஒரு மாட்டுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தொடாா்ந்து சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித் திரிந்தால், பறிமுதல் செய்யப்பட்டு கோசாலையில் ஒப்படைக்கப்படும் என மாநகராட்சி சாா்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com