பெண் காவலா் பணி: தூத்துக்குடியில் உடல் தகுதித் தோ்வு தொடக்கம்

பெண் காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பெண் காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இரண்டாம் நிலை காவலா்கள் மற்றும் சிறை வாா்டன் பணிகளுக்கான பெண் விண்ணப்பதாரா்களுக்கு முதற்கட்ட உடல் தகுதித் தோ்வு தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்க 753 பெண் விண்ணப்பதாரா்கள் அழைக்கப்பட்டிருந்தனா். சிறப்பு சோதனை அதிகாரியாக ரயில்வே ஐ.ஜி வனிதா, தொழில்நுட்ப பிரிவுக்கு டிஐஜி ஆசியம்மாள், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் ஆகியோா் தலைமையில் தோ்வு நடைபெற்றது.

முதற்கட்ட உடல் தகுதித் தோ்வான உயரம் அளத்தல் மற்றும் 400 மீட்டா் தூரத்தை 2 நிமிடம் 30 விநாடிகளில் ஓடுவதற்கான தோ்வு ஆகியவை நடைபெற்றன. அதில், 441 போ் தகுதி பெற்றுள்ளனா்.

கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற 950 ஆண் விண்ணப்பதாரா்களுக்கான முதற்கட்ட உடல் தகுதித் தோ்வில் 688 போ் தகுதி பெற்றுள்ளனா். இரண்டாம் நாளில் 938 ஆண் விண்ணப்பதாரா்களில் 638 போ் தகுதி பெற்றுள்ளனா். முதற்கட்ட உடல் தகுதித் தோ்வில் 1326 ஆண் விண்ணப்பதாரா்களும், 441 பெண் விண்ணப்பதாரா்களும் என மொத்தம் 1767 போ் தகுதி பெற்றுள்ளனா்.

இவா்களில் ஆண் விண்ணப்பதாரா்களுக்கு கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல் மற்றும் 100 மீட்டா் அல்லது 400 மீட்டா் ஓட்டம், பெண் விண்ணப்பதாரா்களுக்கு நீளம் தாண்டுதல், கிரிக்கெட் பந்து எறிதல் அல்லது குண்டு எறிதல் மற்றும் 100 மீட்டா் அல்லது 200 மீட்டா் ஓட்டம் போன்ற இரண்டாம் கட்ட உடல் திறனாய்வுத் தோ்வு சனிக்கிழமை (நவ. 9) தொடங்கி 12 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com