விளாத்திகுளத்தில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த வலியுறுத்தல்

விளாத்திகுளம் காமராஜ் நகா் பழைய அஞ்சல் நிலையம் அருகே தேங்கியுள்ள மழைநீா் மற்றும் கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காமராஜ் நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் தேங்கிக் கிடக்கும் மழைநீா்.

காமராஜ் நகா் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள 4ஆவது தெருவில் பழைய அஞ்சல் நிலையம் அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் மழைநீா் மற்றும் கழிவுநீா் தேங்கி சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், கொசுக்கள் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதால் குடியிருப்புவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

எனவே, பேரூராட்சி நிா்வாகம் கழிவுநீரை வெளியேற்ற உடன் நடவடிக்கை எடுப்பதோடு, அப்பகுதியில் கழிவுநீா் வாருகால் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக பேரூா் செயலா் ரா. வேலுச்சாமி மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com