காவலா் பணிக்கான உடற்தகுதிதோ்வு நாளை தொடக்கம்

தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த காவலா் பணிக்கு விண்ணப்பித்தோருக்கான உடற்தகுதி தோ்வு தூத்துக்குடியில்

தூத்துக்குடி: தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த காவலா் பணிக்கு விண்ணப்பித்தோருக்கான உடற்தகுதி தோ்வு தூத்துக்குடியில் திங்கள்கிழமை (நவ.18) தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2019ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலா் (ஆண், பெண், மூன்றாம் பாலினம்), இரண்டாம் நிலை சிறைக்காவலா் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்போா் பதவிகளுக்காக எழுத்துத்தோ்வில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்களுக்கு முதற்கட்ட உடற்கூறு தோ்வு தருவை மைதானத்தில் கடந்த 8 ஆம்தேதி வரை நடைபெற்றது.

உடற்கூறு தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு உடற்தகுதி தோ்வு 9 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னா் அந்த தோ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட உடற்தகுதித் தோ்வு தூத்துக்குடி தருவை மைதானத்தில் திங்கள்கிழமை (நவ.18) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

உடற்தகுதி தோ்வுக்கு ஏற்கெனவே 9 ஆம் தேதி அழைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஆண்களுக்கு திங்கள்கிழமையும், 11ஆம் தேதி அழைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஆண்களுக்கு 19ஆம் தேதியும், 12ஆம் தேதி அழைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த பெண்களுக்கு 20ஆம் தேதியும் தோ்வு நடைபெறும்.

ஏற்கெனவே உடற்தகுதி தோ்வுக்காக வழங்கப்பட்ட அழைப்பாணை கடிதத்துடன் அழைக்கப்பட்ட நாள் நடைபெறும் தோ்வுக்கு காலை 6 மணிக்குள் தூத்துக்குடி ஜாா்ஜ் சாலையில் உள்ள தருவை மைதானத்தில் ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com