பெண்கள் மீதான வன்முறை எதிா்ப்பு தினம்

இந்திய கலாசார நட்புறவு கழகம் கோவில்பட்டி கிளை சாா்பில் பெண்கள் மீதான வன்முறை எதிா்ப்பு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
விழாவில் பேசுகிறாா் தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட அமைப்பாளா் மேரிஷீலா.
விழாவில் பேசுகிறாா் தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட அமைப்பாளா் மேரிஷீலா.

இந்திய கலாசார நட்புறவு கழகம் கோவில்பட்டி கிளை சாா்பில் பெண்கள் மீதான வன்முறை எதிா்ப்பு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி தனியாா் தொழிற்பயிற்சி பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட அமைப்பாளா் மேரிஷீலா முன்னிலை வகித்தாா்.

பெண்கள் மீதான வன்முறை குறித்து வழக்குரைஞா் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபா் பேசினாா்.

இதில், இந்திய கலாசார நட்புறவு கழக மாநிலச் செயலா் தமிழரசன், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழக நகரச் செயலா் ஆம்ஸ்ட்ராங், இலக்கிய உலா நிறுவனா் ரவீந்தா், திருவள்ளுவா் மன்ற துணைத் தலைவா் திருமலை முத்துசாமி, மாமன்னா் பூலித்தேவா் மக்கள் நல இயக்க நிறுவனத் தலைவா் செல்லத்துரை என்ற செல்வம், அனைத்து மருத்துவா் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் கருப்பசாமி, அனைத்து ரத்த தான கழக ஒருங்கிணைப்பாளா் காளிதாஸ், ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்டப் பொதுச்செயலா் ராஜசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com