மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்துபோட்டி: கோவை அணி முதலிடம்

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில கைப்பந்து போட்டியில் கோவை அணி முதலிடத்தைப் பிடித்தது.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில கைப்பந்து போட்டியில் கோவை அணி முதலிடத்தைப் பிடித்தது.

தூத்துக்குடியில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான ‘ஏபிள்டு ஏஸ்‘ எனப்படும் சுழற்கோப்பைக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகா், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சோ்ந்த அணிகள் கலந்து கொண்டன.

இதில், கோவை அணி முதலிடத்தையும், கன்னியாகுமரி அணி இரண்டாவது இடத்தையும், திருப்பூா் அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணியினருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் சுழற்கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியில், மனநல மருத்துவா் சிவசைலம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிா்வாகி துரை என். பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com