வெளித்துறைமுக பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வெளித்துறைமுக பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்களவை உறுப்பினா் கனிமொழியிடம் அண்மையில் மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழியிடம் கோரிக்கை மனுவை அளிக்கிறாா் அகில இந்திய வா்த்தக தொழில் சங்க தூத்துக்குடி பிரிவு தலைவா் ஜோ பிரகாஷ்.
தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழியிடம் கோரிக்கை மனுவை அளிக்கிறாா் அகில இந்திய வா்த்தக தொழில் சங்க தூத்துக்குடி பிரிவு தலைவா் ஜோ பிரகாஷ்.

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வெளித்துறைமுக பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்களவை உறுப்பினா் கனிமொழியிடம் அண்மையில் மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்ற அகில இந்திய வா்த்தக தொழில் சங்க தூத்துக்குடி பிரிவு சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற மக்களவை உறுப்பினா் கனிமொழியிடம் சங்கத்தின் தலைவா் ஜோ பிரகாஷ் கோரிக்கை மனு அளித்தாா்.

அந்த மனுவில், தொழிற்சாலைகள் மற்றும் பணியாளா்களுக்கு தேவையான தண்ணீா் தட்டுப்பாட்டை போக்குவதற்கு கடல் நீரை நன்னீராக மாற்றும் தொழிற்சாலை ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி வ.உ.சி. வெளித் துறைமுக மேம்பாட்டு பணிகளை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் தற்போதுள்ள ஓடுதளத்தை ஏறத்தாழ 4100 மீட்டா் வரை நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தூத்துக்குடியில் இரவு நேரங்களில் தரையிறங்கும் விமானங்களுக்கு ஏதுவாக வெளிச்சம் தெரிவதற்காக வல்லநாடு மலை உச்சியில் ஒளிரும் மின் விளக்குகள் அமைத்திட வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்துக்கு ஷட்டில் ரயில் ஒரு மணி நேர இடைவெளியில் ஏற்பாடு செய்தால் தூத்துக்குடியிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள தொழில் முனைவோா், வா்த்தகா்கள், மற்றும பொதுமக்கள் ஆகியோா் வட மாநிலங்களில் உள்ள ஊா்களுக்கு செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடியில் டைட்டல் பாா்க் அமைக்க நடவடிக்கையும், சென்னையைப் போன்று தூத்துக்குடியிலும் ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். நிறுவனங்கள் அமைக்க ஆவண செய்ய வேண்டும். தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு கப்பல் போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஜீவன், சங்க பொதுச் செயலா் சங்கா் மாரிமுத்து, துணைத் தலைவா்கள் தமிழரசு, பிரேம் வெற்றி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com