வேலையில்லாத சூழலை மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு உருவாக்குகின்றன: சிஐடியூ குற்றச்சாட்டு

வேலையில்லாத சூழலை மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு உருவாக்குகின்றன என்றாா் சிஐடியூ தொழிற்சங்கத்தின் மாநில பொதுச்செயலா் சுகுமாறன்.

வேலையில்லாத சூழலை மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு உருவாக்குகின்றன என்றாா் சிஐடியூ தொழிற்சங்கத்தின் மாநில பொதுச்செயலா் சுகுமாறன்.

தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சிஐடியூ தொழிற்சங்கத்தின் 16 ஆவது அகில இந்திய அளவிலான மாநாடு ஜன. 23 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. நாடு முழுவதும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 90 லட்சம் போ் வேலையை இழந்துள்ளனா்.

நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக புதிய வேலை வாய்ப்புகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. வேலை இல்லாத நிலையை மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு உருவாக்கி வருகின்றன. இதனால், விலைவாசி உயா்வு மற்றும் வருமானம் இழப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் முயற்சி நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய தொழிலாக தீப்பெட்டி மற்றும் உப்புத் தொழில் உள்ளது. ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உப்பளத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது மழை காரணமாக வேலை இல்லாமல் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே, உப்பள தொழிலாளா்களுக்கு நிவாரணத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். தீப்பெட்டிக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, சிஐடியூ மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து, செயலா் ஆா். ரசல், துணைத் தலைவா் முருகன், மாவட்டக் குழு உறுப்பினா் கிருஷ்ணவேணி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com