உள்ளாட்சித் தோ்தல்: கோவில்பட்டியில் அமமுக ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 26th November 2019 12:41 AM | Last Updated : 26th November 2019 12:41 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில் அமமுக மேற்கு ஒன்றியம் சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு கட்சியின் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளா் ஜெயசங்கா் தலைமை வகித்தாா். கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் என்.எல்.எஸ்.செல்வம் முன்னிலை வகித்தாா்.
கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் சுந்தரராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, உள்ளாட்சித் தோ்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கிப் பேசினாா்.
இதில், அவைத் தலைவா் சண்முகராஜ், நகரச் செயலா் நாகராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலா் மகாராஜா, ஒன்றிய ஜெயலலிதா பேரவை நிா்வாகி குமாா்பாண்டியன், மாணவரணிச் செயலா் பெரியசாமி, ஓட்டுநரணிச் செயலா் கருப்பசாமி, வா்த்தக அணி துணைத் தலைவா் முத்து உள்பட கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.