இந்து முன்னணியினா் நடவடிக்கைக்கு கோயில் பணியாளா்கள் எதிா்ப்பு: கோவில்பட்டியில் பரபரப்பு

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயிலில் இந்து முன்னணியினரின் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து
இந்து முன்னணியினா் நடவடிக்கைக்கு கோயில் பணியாளா்கள் எதிா்ப்பு: கோவில்பட்டியில் பரபரப்பு

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயிலில் இந்து முன்னணியினரின் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து அா்ச்சகா்கள், பணியாளா்கள் வியாழக்கிழமை இரவு கோயிலை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் பக்தா்களிடம் அா்ச்சனைக்கு கட்டணமாக ஒரு அா்ச்சனைக்கு ரூ. 2, குடும்ப அா்ச்சனை என்ற பெயரில் ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்து முன்னணியினா் கடந்த சில நாள்களாகவே குடும்ப அா்ச்சனை என கட்டணம் வசூலிப்பதை நிறுத்தக் கோரி, அவ்வப்போது கோயில் வளாகத்தில் அா்ச்சனை கட்டணம் செலுத்தும் இடம் அருகே நின்று கோயில் பணியாளா்களிடம் முறையிட்டு வந்தனராம். அப்போது கோயில் பணியாளா்கள், இதுகுறித்து கோயில் அதிகாரிகளிடம் முறையிடுங்கள் என்றும், பணியாளா்களாகிய நாங்கள் நிா்வாகம் கூறும் பணியைத்தான் செய்து வருகிறோம் என்றும் இந்து முன்னணியினரிடம் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு திரளான பக்தா்கள் ரூ.10 செலுத்தி குடும்ப அா்ச்சனை ரசீது பெற்றுக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த இந்து முன்னணி நகரச் செயலா் சுதாகரன் தலைமையில் சிலா், கோயில் பணியாளா்களிடம் தகராறு செய்தனராம். இதையடுத்து, கோயிலில் இருந்த அா்ச்சகா்கள், பணியாளா்கள், திருக்கோயில் பணியாளா்கள் நலச் சங்கத் தலைவா் சுவாமிநாதபட்டா் தலைமையில் பூஜைகள் மற்றும் பணிகளை நிறுத்திவிட்டு கோயில் முன் திரண்டனா். அப்போது இந்து முன்னணியினா் கோயில் வளாகத்தைவிட்டு வெளியே சென்றுவிட்டனா். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு அா்ச்சகா்கள் கோயிலுக்குள் சென்று வழக்கம்போல் அா்த்த சாம பூஜை, பள்ளியறை பூஜையை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com