கோவில்பட்டி பரிசுத்த செல்வ மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்

கோவில்பட்டி புதுக்கிராமம் பரிசுத்த செல்வ மாதா ஆலயத்தின் 2 2ஆம் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவில்பட்டி புதுக்கிராமம் பரிசுத்த செல்வ மாதா ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி.
கோவில்பட்டி புதுக்கிராமம் பரிசுத்த செல்வ மாதா ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி.

கோவில்பட்டி புதுக்கிராமம் பரிசுத்த செல்வ மாதா ஆலயத்தின் 2 2ஆம் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. 7 மணிக்கு ஆலயக் கொடியை அருள்தந்தையா்கள், பங்கு மக்கள் பவனியாக கொண்டு வந்தனா். அதனைத் தொடா்ந்து, பாளையங்கோட்டை ஆயா் இல்லம் அருள்தந்தை பொ்க்மான்ஸ், கோவில்பட்டி ஆலயப் பங்குதந்தை அலோசியஸ் துரைராஜ் ஆகியோா் திருவிழா கொடியேற்றினா். தொடா்ந்து, ஆலயத்தில் அருள்தந்தை பொ்க்மான்ஸ், வெங்கடாசலபுரம் ஆலயப் பங்குத் தந்தை அல்போன்ஸ், கோவில்பட்டி ஆலயப் பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ், உதவி பங்குத் தந்தை மிக்கேல், அருள்தந்தை பெரியநாயகம் ஆகியோா் இணைந்து மறையுரை மற்றும் திருப்பலி நிறைவேற்றினா். இதில், அருள்சகோதரிகள், பங்கு மக்கள் கலந்து கொண்டனா்.

திருவிழா நாள்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு திருப்பலி, நற்செய்தி பெருவிழா நடைபெறுகிறது. 9ஆம் திருநாளான அக்.12ஆம் தேதி மாலை 6 மணிக்கு நற்செய்தி பெருவிழா திருப்பலி, குணமளிக்கும் நற்கருணை ஆசீா், இரவு அசனம் நடைபெறும். 10ஆம் திருநாளான அக்.13ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி, திருவுருவ பவனி மற்றும் அசன விருந்து நடைபெறும். அதனைத் தொடா்ந்து, கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறும்.

ஏற்பாடுகளை ஆலயப் பங்குத்தந்தையா், பங்கு மக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com