கோவில்பட்டியில் சட்ட விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 06th October 2019 08:56 PM | Last Updated : 06th October 2019 08:56 PM | அ+அ அ- |

கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில், சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான எம்.அகிலாதேவி பங்கேற்று, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு சட்டம், நுகா்வோரின் கடமைகள் குறித்துப் பேசினாா். தொடா்ந்து முகாமில், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன், அரசு வழக்குரைஞா் சந்திரசேகா் ஆகியோா் பேசினா்.
வழக்குரைஞா்கள் முத்துராமலிங்கம், மோகன்தாஸ், முத்துசாமி, ரேவதி மற்றும் மாணவிகள், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். உதவித் தலைமையாசிரியை ரூத்ரத்தினகுமாரி வரவேற்றாா். ஆசிரியை அமலபுஷ்பம் நன்றி கூறினாா்.
கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சட்டம் குறித்த விழிப்புணா்வு முகாமிற்கு சாா்பு நீதிபதி தலைமை வகித்தாா். இதில், நீதிபதி சரவணகுமாா், அரசு வழக்குரைஞா், கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.