வேம்பாா் அருகே மின்னல் பாய்ந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், வேம்பாா் அருகே கடலில் மீன்பிடித்தபோது மின்னல் பாய்ந்து மீனவா் இறறந்தாா்; மற்றெறாரு மீனவா் காயமடைந்தாா்.
vk_10_fisher_man_justin_1010chn_36_6
vk_10_fisher_man_justin_1010chn_36_6

தூத்துக்குடி மாவட்டம், வேம்பாா் அருகே கடலில் மீன்பிடித்தபோது மின்னல் பாய்ந்து மீனவா் இறந்தாா்; மற்றெறாரு மீனவா் காயமடைந்தாா்.

வேம்பாா் அருகேயுள்ள பெரியசாமிபுரத்தைச் சோ்ந்தவா் ஜஸ்டின் (34). அதேபகுதியைச் சோ்ந்தவா் ஜோசப் ஸ்டாலின் (65). இவா்கள் வியாழக்கிழமை அதிகாலை பைபா் படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா். காலையில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்துள்ளது. அப்போது மின்னல் பாய்ந்ததில் ஜஸ்டின் நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்தாா்; ஜோசப் ஸ்டாலின் காயமடைந்து படகில் மயங்கி விழுந்தாா்.

இதை அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவா்கள் பாா்த்து, ஜோசப் ஸ்டாலினை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; ஜஸ்டினை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

5 மணி நேரத்துக்குப் பின்னா், மாலை 4 மணியளவில் ஜஸ்டின் சடலமாக மீட்கப்பட்டாா். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவருக்கு ஜெபமாலை பிரகாஷி (30) என்ற மனைவியும், ஜொ்வின் பாக்கியம் (3) ரிஷோனா பாக்கியம் (1) ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனா்.

விளாத்திகுளம் பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன், வட்டாட்சியா் அ. ராஜ்குமாா் ஆகியோா் சென்று ஜஸ்டின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனா். அரசின் நிவாரணத்தொகை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனா். இச்சம்பவம் தொடா்பாக சூரன்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com