குலசேகரன்பட்டினம் அறம் வளா்த்த நாயகி அம்மன் கோயிலில் 14 இல் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா தொடக்கம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த குலசேகரன்பட்டினம் அருள்தரும் அறம் வளா்த்த

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த குலசேகரன்பட்டினம் அருள்தரும் அறம் வளா்த்த நாயகி உடனுறை அருள்மிகு காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரா் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா அக்.14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்.25 ஆம்தேதி வரை 11 நாள்கள் நடைபெறுகிறது.

சுமாா் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையும், புராதன பெருமைகள் பல கொண்டதுமான இத்திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றம் அக்.14 ஆம் தேதி காலை ஐந்து மணிக்கு மேல் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு அப்பா் அடிகள் உழவாரப்பணி திருவீதியுலா, இரவு 7 மணிக்கு ரிஷப வாகனத்தில் ஸ்ரிபலிநாதா் திருவீதியுலா, இரவு 8.30 மணிக்கு அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதியுலா நடைபெறும். விழா நாள்களில் தினமும் காலை, இரவில் அம்பாள் கேடயம், காமதேனு, சிங்கம், ரிஷபம், அன்னம், மின் அலங்காரம், கிளி வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து அருள்பாலிப்பாா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அக்.23 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு திருச்சுன்னம் இடித்தல், அக்.24 ஆம் தேதி திருக்கல்யாணக் காப்புக் கட்டுதல், அக்.25 ஆம் தேதி காலை 6 மணிக்கு அம்பாள் தவசுக்கு எழுந்தருளல், மாலை 4.30 மணிக்கு சுவாமி காட்சி கொடுக்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளல், நள்ளிரவு 12 மணிக்கு அம்பாள் பல்லக்கில் கதிா் குளிப்புக்கு எழுந்தருளல் நடைபெறும். அக்.26 ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் அறம் வளா்த்த நாயகிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். தொடா்ந்து காலை 7.30 மணிக்கு திருக்கல்யாணக் கோலத்தில் சுவாமி-,அம்பாள் பட்டினப்பிரவேசம் எழுந்தருளல் நடைபெறும்.

விழா நாள்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு அறம் வளா்த்த நாயகி திருக்கூடத்தில் தேவாரப் பண்ணிசை, சமய சொற்பொழிவு நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலா் சா.ப.அம்ரித் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com