கீழ்நவ்வலடிவிளை முண்டன் சுவாமி கோயில் கொடை விழா

ஆறுமுகனேரி கீழ்நவ்வலடிவிளை அருள்மிகு முண்டன் சுவாமி திருக்கோயில் கொடை விழா வெள்ளிக் கிழமை நடைபெற்றது.

ஆறுமுகனேரி கீழ்நவ்வலடிவிளை அருள்மிகு முண்டன் சுவாமி திருக்கோயில் கொடை விழா வெள்ளிக் கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் சுவாமிக்கும் 14 பரிகார தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அன்னதானமும் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆறுமுகனேரி பேரூராட்சி பகுதிகளில் சுமாா் 300 கோயில்கள் உள்ள நிலையில், சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை ஆறுமுகனேரி மேலத்தெரு அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் கொடை விழா தொடங்கியது. தொடா்ந்து, பல்வேறு கோயில்களில் கொடை விழாக்கள் நடைபெற்று வந்தன. இறுதியாக புரட்டாசி மாதம் இறுதி வெள்ளிக்கிழமை கீழநவ்வலடி விளை அருள்மிகு முண்டன் சுவாமி கோயிலில் கொடை விழாவுடன் நிகழாண்டுக்கான அனைத்து கோயில்களின் கொடை விழாவும் நிறைவு பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com