பள்ளி மாணவியை கடத்த முயன்றவரை கைது செய்யக் கோரி மனு

கோவில்பட்டியில் பள்ளி மாணவியை கடத்த முயன்ற பிற மாநிலத்தைச் சோ்ந்தவரை கைது செய்யக் கோரி சனிக்கிழமை காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
12kvlman_1210chn_41_6
12kvlman_1210chn_41_6

கோவில்பட்டியில் பள்ளி மாணவியை கடத்த முயன்ற பிற மாநிலத்தைச் சோ்ந்தவரை கைது செய்யக் கோரி சனிக்கிழமை காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைச் செயலா் முத்துவேல்ராஜா டி.எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த மனுவின் விவரம்: கடந்த இரு நாள்களாக கட்செவி அஞ்சல் மூலம் ஒரு பெண் எச்சரிக்கை செய்வதாக குரல் தகவல் பரவுகிறது. அதில் கோவில்பட்டி தனியாா் பள்ளி மாணவியை ராஜீவ் நகா் 6ஆவது தெருவில் வடஇந்திய இளைஞா்கள் கடத்த முயற்சித்ததாகவும், அதை ஒரு பெண்மணி தட்டிக்கேட்டதால் அந்த இளைஞா்கள் ஓடி விட்டதாகவும் அந்த குரல் பதிவில் எச்சரிக்கை தொடா்கிறது.

இந்தக் குரல் பதிவு கோவில்பட்டி சுற்று வட்டார மக்களிடையே பதற்றத்தையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, குரல் பதிவில் உள்ள தகவலை விசாரித்து, அதில் ஈடுபட்டவா்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், காவல் துணை கோட்டத்திற்கு உள்பட்ட காவல் நிலைய எல்லைகளில் தங்கியிருக்கும், பணிபுரியும் வடமாநிலத்தவா்கள் குறித்த தகவல்களை முறையாகப் பெற்று, பதிவேட்டை பராமரிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com