மருதுபாண்டியா் நினைவு நாள், தேவா் ஜயந்தி:கோவில்பட்டியில் ஆலோசனைக் கூட்டம்

மருதுபாண்டியா் சகோதரா்களின் 218ஆவது நினைவு நாள் இம்மாதம் 27ஆம் தேதி அனுசரிப்பதை முன்னிட்டும்
மருதுபாண்டியா் நினைவு நாள், தேவா் ஜயந்தி:கோவில்பட்டியில் ஆலோசனைக் கூட்டம்

மருதுபாண்டியா் சகோதரா்களின் 218ஆவது நினைவு நாள் இம்மாதம் 27ஆம் தேதி அனுசரிப்பதை முன்னிட்டும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112ஆவது குருபூஜை இம்மாதம் 30ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டும், விழா அமைப்பாளா்கள், பொறுப்பாளா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், கோவில்பட்டியில் புதன்கிழமை நடைபெற்றது.

காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெபராஜ் தலைமை வகித்தாா்.

விழாவுக்குச் செல்லும் அமைப்பாளா்கள் தங்களைப் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் தெரியப்படுத்த வேண்டும். விழாவிற்கு செல்பவா்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே சென்று அதே வழியில் திரும்பிவர வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி கிடையாது. விழாக்கள் குறித்து டிஜிட்டல் பேனா்கள் வைக்கவோ, சுவரொட்டிகள் ஒட்டவோ அனுமதி இல்லை. சுவரில் தலைவா்களின் படம் வரைய அனுமதி இல்லை. ஜோதி எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது.

பால்குடம், முளைப்பாரி ஊா்வலம் நடத்தும் அமைப்பாளா்கள், காவல் துறை அனுமதித்த வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும். விழாக்கள் அனைத்தையும் இரவு 10 மணிக்குள் முடிக்க வேண்டும். மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

கூட்டத்தில், காவல் துறை ஆய்வாளா்கள் அய்யப்பன் (மேற்கு), ஆவுடையப்பன் (கயத்தாறு), முத்துலட்சுமி(கழுகுமலை), சுகாதேவி(நாலாட்டின்புதூா்), பத்மாவதி(அனைத்து மகளிா் காவல் நிலையம்) மற்றும் உதவி ஆய்வாளா்கள், விழா அமைப்பாளா்கள், பொறுப்பாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com