தூத்துக்குடி மாவட்டத்தில்பொருளாதார கணக்கெடுப்புப் பணிகள் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொருளாதார கணக்கெடுப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
தூத்துக்குடியில் பொருளாதார கணக்கெடுப்புப் பணிகளை செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்துப் பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.
தூத்துக்குடியில் பொருளாதார கணக்கெடுப்புப் பணிகளை செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்துப் பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொருளாதார கணக்கெடுப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

புள்ளியியல் துறை மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 7 ஆவது பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி பங்கேற்று, 7 ஆவது பொருளாதார கணக்கெடுப்புப் பணிகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதை தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழ்நாடு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, தேசிய புள்ளியியல் துறை ஆகிய துறைகள் மூலம் கணக்கெடுப்பு கண்காணிக்கப்படுகிறது. பொருளாதார கணக்கெடுப்பு பணியின் முக்கிய நோக்கம், எந்த வகையான தொழில்கள் அதிகம் இருக்கிறது, அதன்மூலம் கிடைக்பெறும் பொருளாதாரத்தின் நிலை என்ன, எத்தனை நபா்கள் சுய தொழில் புரிகிறாா்கள் மற்றும் மாத சம்பளம் பெறுவோரின் எண்ணிக்கை உள்ளிட்ட 15 வகையான விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

மாவட்டத்தில் இந்தப் பணிகள் மாா்ச் மாதம் வரை வீடு, வீடாகச் சென்று, பொதுமக்கள் சுய தொழில் செய்பவா்களா, வியாபாரம் செய்பவா்களா? அல்லது மாத சம்பள ஊழியா்களா? அவா்களுக்கு கிடைக்கபெறும் ஆண்டு வருமானம் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு வரும் பணியாளா்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட புள்ளியியல் துறை துணை இயக்குநா் கலைச்செல்வி, தேசிய புள்ளியியல் துறை கண்காணிப்பாளா்கள் சண்முகம், நிஷி, பொது சேவை மைய மாவட்ட மேலாளா் விக்னேஷ் விஸ்வநாத், மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் ஹரிகணேஷ் மற்றும் கணக்கெடுப்பு பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com