தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.140 கோடி ஒதுக்கீடு: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலை பணிகளுக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.140 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். 
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திங்கள்கிழமை  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளை விரிவாக்கம் செய்தல் மற்றும் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிகழாண்டு ரூ.140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 179 சாலைகளில் இப்பணிகள் நடைபெறவுள்ளன. வரும் டிசம்பர் மாதத்துக்குள் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புத்தகத் திருவிழா: தூத்துக்குடியில் அக்டோபர் மாதம் தொடக்கத்தில் புத்தகத் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நேஷனல் புக் டிரஸ்ட் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. புத்தக திருவிழாவுக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் தேதி முடிவு செய்யப்படும். இம் மாவட்ட பாசன தேவைக்காக தாமிரவருணியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 
  தூத்துக்குடி மாவட்டத்துக்கு 1,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் போதுமான தண்ணீர் உள்ளது. நீர் வரத்தும்  அதிகமாக உள்ளது. எனவே, தண்ணீர் திறப்பை நீட்டிக்க பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குலசேகரன்பட்டினம் தசரா விழா மற்றும் திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாக்களுக்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு போன்ற பணிகளை சிறப்பாக செய்ய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com