திருச்செந்தூரில் இரு சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 13th September 2019 06:39 AM | Last Updated : 13th September 2019 06:39 AM | அ+அ அ- |

திருச்செந்தூரில் அமலிநகர் இளைஞர்கள் சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்த இரு சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை தியாகி பகத்சிங் பேருந்துநிலையம் முன்பிருந்து காவல் துணைக்கண்காணிப்பாளர் ஆ.பாரத் தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். அமலிநகர் ஊர்நலக்கமிட்டியினர் முன்னிலை வகித்தனர். பேரணியில் பங்கேற்றவர்கள் தலைக்கவசம் அணிந்து, காமராசர் சாலை, ரதவீதிகள் வழியாக அமலிநகர் சேர்ந்தனர்.
ஏற்பாடுகளை அமலிநகர் பங்குத் தந்தை ரவீந்திரன் பர்னாந்து மற்றும் அமலிநகர் இளைஞரணியினர் செய்திருந்தனர்.