திருச்செந்தூர் முத்துமாலையம்மன் கோயில் கொடை விழா

திருச்செந்தூர் முத்துமாலையம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு  பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர்.
திருச்செந்தூர் முத்துமாலையம்மன் கோயில் கொடை விழா

திருச்செந்தூர் முத்துமாலையம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு  பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர்.

திருச்செந்தூர், 13-ஆவது வார்டு இந்து நாடார் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட முத்துமாலையம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு அம்மனுக்கு  சந்தணக் காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை திரளான பக்தர்கள் பால் குடம் எடுத்து வீதியுலா வந்து கோயிலில் சேர்த்தனர். 

தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,  அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு  முளைப்பாரி எடுத்து வீதி சுற்றி அம்மனுக்கு செலுத்துதலும், வெள்ளி அங்கி சாத்தி அம்மனுக்கு புஷ்ப அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.  நள்ளிவு 12.30 மணிக்கு சிங்க வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.  விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com